வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க விஜயமும், பேச்சுவார்த்தையும்..!
Read Time:57 Second
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அடுத்தவாரம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இருநாட்டு அரசுகளுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனையும் அமைச்சர் சந்தித்து உரையாற்ற எதிர்ப்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கைமீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அமெரிக்க அரசிடம் அமைச்சர் விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating