விடுதலைப் புலிகளிடம் மூக்குடைபட்ட வெள்ளைப் புலிகளான நோர்வே

Read Time:3 Minute, 46 Second

tigers.jpgபுரிந்தணர்வு உடன்படிக்கை என்னும் பெயரில் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஜனநாயகமுலாம் பூச முற்பட்ட நோர்வே அரசாங்கம் ஏற்கனவே இலங்கையில் செயற்பட்ட அனைத்து ஜனநாயக அமைப்புக்களையும் அழித்து ஒழி ப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டது.

அதற்கமைய 2002 ம் ஆண்டிற்கு முன்னர் புலிகளினால் படுகொலைசெய்யப்பட்டவர்கள் தவிர்ந்த எஞ்சிய அரசியல்வாதிகளையும் ஒழித்துக்கட்டுவதற்கான வாய்ப்பு நோர்வேயின் அனுசரணையுடன் முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் நோர்வேயின் தலைமையில் இலங்கைக்கான யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளை மேற்கொண்ட காலப்பகுதியில் ஏறக்குறைய 1.893 அப்பாவிப் பொதுமக்கள் புலிகளினால் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிக்காட்டிநிற்கின்றன.

அத்துடன் இலங்கையின் இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான வெளியுறவு அமைச்சர் திரு லக்ஸ்மன் கதிர்காமர் புலிகளின் சினைபர் தாக்குதல்மூலம் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக கண்காணிப்பாளர்களாகவும் இலங்கையின் விசேட சமாதானத் தூதுவர் பதவியினையும் வகித்தக்கொண்டிருந்த நோர்வே மேற்கொண்ட நடவடிக்கை என்ன? மாறாக பல்லாயிரம் மில்லின் நிதியுதவியினை புலிகளுக்கு வழங்கியதன்மூலம் புலிகளின் வன்முறைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கும் பணியினையே வெள்ளைப்புலிகள் மேற்கொண்டார்கள்.

இறுதியில் இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் சிலரை அவர்களின் சொந்தப்பணத்திலும் புலிகளின் வன்மறைக் கும்பல்கள் ஒரு சாராரை தமது பணத்திலும் நோர்வேய்க்கு வரவழைத்த வெள்ளைப்புலிகள் ஏமாற்றமடைந்தார்கள். இலங்கையின் யத்தநிறத்தக் கண்காணிப்பினை மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் தாம் பேசுவதற்குத் தயாரில்லையென பலிகள் கூறியதற்கமைய இலங்கை அசாங்கத்திற்கும் புலிகளுக்கமிடையில் இடம்பெறவிருப்பதாகக் கூறப்பட்ட பேச்சவார்த்தைக்கு முற்றப்புள்ளி வைக்கப்பட்டது.

புலிகளை நோர்வேய்க்கு வரவழைக்கு முன்னர் எதற்காக அவர்களை நோர்வேய்க்கு அழைத்தனர் என்பதனைக்கூட மக்களுக்கு வெளியிடுவதற்கு தயாரற்ற நோர்வே இலங்கை மக்களையும் ஐரோப்பிய ஒன்றியத்தினையும் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளது என்பது தெளிவாகின்றது. இந்நிலையில் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளிலும் கண்காணிப்புப் பணியிலுமிருந்தும் நோர்ர்வே வெளியேறவேண்டுமென இலங்கைவாழ் அனைத்து இனமக்களும் வேண்டிநிற்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐரோப்பாவில் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளால் வைப்பிலிடப்பட்டிருக்கும் பெருந்தொகையான பணம் வங்கிகளால் முடக்கப்படும் சாத்தியம்.
Next post மீண்டும் புதைகுழியில் இருந்து சடலங்கள்