வானம் படத்தில் சிம்புவுடன் நடிக்கச் சம்மதித்த பரத்..!

Read Time:2 Minute, 33 Second

இரண்டு முன்னணி நாயகர்கள் இணைந்து நடிப்பதென்பது தமிழ் சினிமாவைப் பொறுத்த மட்டில் குதிரைக் கொம்பாகவே இருந்து வருகின்றது.  அவ்வப்போது முன்னணி நடிகர்களை இணைத்து நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஆனால் இறுதி வரை கை கூடாது.  யாராவது முன்னணி நடிகர்கள் தொடக்கி வைத்தார்களெனின் ஏனையவர்கள் தொடர்வார்கள். அந்த காரியத்திற்கு பிள்ளையார் சுழி போடுபவர் யார்? பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி கோடாம்பாக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. தற்போது மணி கட்டத் தயாராகிவிட்டார் சின்னத்தளபதி பரத். தமிழ் சினிமாவில் வேகமாக வெற்றி நடிகர் என்ற பெயருடன் வலம் வந்த இவரது அண்மைக்காலத் திரைப்படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இந்த நிலையில் பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வானம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பரத் சம்மதம் தெரிவித்துள்ளார்.  வானம் படம் தெலுங்கில் வெளியாகிய வேடம் படத்தின் ரீ-மேக் ஆகும். இந்தப் படத்திற்கான பூஜை கடந்த வாரம் இடம்பெற்றது. கதாநாயகியாக அனுஸ்கா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஒளிப்பதிவு நீரவ் ஸா, இசை யுவன் சங்கர் ராஜா. திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் கிறிஸ். தெலுங்கு வேடம் படத்தில் பரத் ஏற்றிருந்த மனோஜ் என்ற பாத்திரத்தையே தமிழிலும் ஏற்கவுள்ளார். எனவே சரத்குமார், ஆர்யா வரிசையில் இனி பரத்தும் இணைகின்றார். இந்தப் புது முயற்சி, தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே ஒற்றுமையை உருவாக்குகின்றதா, அல்லது வேற்றுமையை தோற்றுவிக்கின்றதா என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படப்பிடிப்பில் மயங்கிவிழுந்த நயன்தாரா – கர்ப்பம் காரணமா?
Next post திருநங்கை வேடத்தில் விஷால்?