காஸ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதும் காலணி வீச்சு..!

Read Time:3 Minute, 34 Second

காஸ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது தான் அணிந்திருந்த காலணியை காஸ்மீரின் சுதந்திர வேட்கை கொண்ட பொதுமகன் ஒருவர் வீசி எறிந்துள்ளார். இந்தியாவில் இன்று காலை முதல் நாடு முழுவதும் 64 வது சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஸ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா கொடியேற்றி வைத்தார். ஒமர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி கொணடிருக்கையில் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் பலத்த சப்தத்துடன் முதல்வரை நோக்கி தனது காலில் இருந்த காலணியை வீசினார். காஸ்மீருக்கு விடுதலை வேண்டும் என ஆவேசமாக கோஸமிட்டார். ஆனால் அதிர்ஸ்டவசமாக அவர்மீது படவில்லை. இதனையடுத்து விழாவில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவற்துறையினர்; அந்த நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்தியாவின் காஸ்மீர் என்றாலே இப்போது  களேபரமான பகுதியாக மாறிவிட்டது. கடந்த சில மாதங்களாக கடும் போராட்டம், துப்பாக்கிச்சூடு, வன்முறை, என ஊரடங்கு நிலைகளில் இருந்து வரும் காஸ்மீரில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது காலனி வீசப்பட்டது கடந்த சில மாதங்களாக கட்டுக்கு அடங்காமல் இருக்கும் வன்முறை தொடர்பாக எழுந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 25 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய வண்ணமாகவே உள்ளனர். இன்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒமர் ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மீதான விசாரணையில் இவரது பெயர் அப்துல்ஆகாத் ஜான் என்றும் இவர் முன்னாள் காவற்துறை உதவி பரிசோதகர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. தனது மீது கல்வீசப்படடாமல் காலனி வீசப்பட்டிருக்கிறது குறித்து தான் கவலைப்படவில்லை. வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் கூறியுள்ளார். இதேவேளை   ஓமர் அப்துல்லா மீது காலனி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 காவற்துறை; உயர் அதிகாரிகள் உட்பட 15  காவற்துறையினர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற காலனி வீச்சில் சீன பிரதமர் வென்ஜியாபோ, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஸ், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்கள்  வரிசையில் ஒமர் அப்துல்லாவும் இப்போது இணைந்து கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகதிகளின் வருகைக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்..!
Next post எம்.வி சன் சீ கப்பலில் ஆயுதங்கள் இருக்கவில்லை – கனேடிய பாதுகாப்பு பிரிவினர்..!