கிச்சுகிச்சு மூட்டும் ரோபோ..!

Read Time:1 Minute, 43 Second
விதவிதமான வசதிகளுடனும், புதிய புதிய டெக்னாலஜியுடனும் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இப்போது ஜோக் சொல்லும் புதிய ரோபோவை கண்டுபிடித்திருக்கிறார் பிரிட்டிஷ் பொம்மை தயாரிப்பாளர் டோனி எல்லீஸ். இந்த சூப்பர் ஸ்மார்ட் ரோபோ இன்டர்நெட்டிலிருந்து ஜோக்குகளை படித்து நம்மிடம் சொல்லி சிரிக்க வைக்கும். மேலும் ‘கராக்கி’ எனும் மியுசிக் வீடியோ கேம்ஸ்சும் இந்த ரோபோ விளையாடுமாம்.
‘ஏஐஎம்இசி என்ற இந்த ரோபோ வெறும் பொம்மையல்ல, எனது க்ளோஸ் ப்ரண்ட்’ என்கிறார் எல்லீஸ். அவர் மேலும் கூறும்போது, “இந்த ரோபோ நமது முகத்தையும், குரலையும் வைத்தே நாம் யார் என்பதை கண்டுபிடித்து விடும். நமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப இன்பர்மேஷன்களையும், நமக்கு பிடித்த ஜோக்குகளையும் இன்டர்நெட்டிலிருந்து எடுத்து சொல்லி  நம்மை அசத்திவிடும். இந்த ஏஐஎம்இசி ரோபோ நொடிப்பொழுதில் இன்பர்மேஷன்களை சேகரித்து உரிமையாளருக்கு தந்துவிடுகிறது. இதை அயல்நாட்டு மொழிகளை கற்பிக்கவும் பயன்படுத்தலாம்’’ என்கிறார் எல்லீஸ்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூரிய குடும்பத்தில் உள்ள என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர்..!
Next post ஆகஸ்ட் 20-ம் தேதி மங்காத்தா ட்ரைலர் வெளியிடப்படும்..!