தாயின் அரவணைப்பில் இறந்த குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்..!

Read Time:3 Minute, 10 Second

தாயின் இதமான அரவணைப்புக் குழந்தையை உறங்க வைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம், நடைமுறையிலும் பார்த்திருக்கின்றோம். ஆனால், இறந்த குழந்தை ஒன்று ஒரு தாயின் அரவணைப்பில் உயிர்பெற்றது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? 
ஆம், இவ்வாறான ஓர் அற்புத நிகழ்வு அண்மையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்றுள்ளது.  சிட்னியைச் சேர்ந்த டேவிட் – கேட் தம்பதியருக்கு குழந்தை ஒன்று பிறந்தது. இருவரும் அளவிலா மகிழ்ச்சியடைந்தனர்.  ஆனால், அவர்களது மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. ஆம், குழந்தை பிறந்ததும் எந்தவித அசைவையும் காட்டாதது இவர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்திருப்பதாகக் கூறியதும், இருவரும் பதறிப் போய்விட்டார்கள்.  தான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை, பிறந்த சில நொடிகளில் இறந்துவிட்டதும், மாளாத் துயரில் இறந்த குழந்தையை மார்போடணைத்துக் கதறினார் கேட். குழந்தையைத் தன் காதருகே வைத்து ஏதேதோ புலம்பி அழுதார். இவ்வாறு 2 மணிநேரம் இறந்த தன் குழந்தையை அணைத்துக் கொண்டு தன் துயரப் போராட்டத்தைத் தொடர்ந்தார் கேட்.
என்ன அதிசயம்…?
குழந்தையின் பிஞ்சு விரல்கள் திடீரென விரிந்தன; தாயின் கையை இறுகப் பிடித்தவாறு அழத் தொடங்கியது குழந்தை.  பரபரப்படைந்த டேவிட் தன் குழந்தை உயிருடன் இருப்பதாக, ஓடிச் சென்று டாக்டர்களிடம் தெரிவித்தார்.  “அதற்கு வாய்ப்பே இலை…” என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்த டாக்டர்கள், வேண்டா வெறுப்பாகக் குழந்தையை நாடிச் சென்றனர்.  குழந்தை தன் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதன் பின்னர், குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர் குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் ஆரோக்கியம் சீராக இருப்பதாகத் தெரிவித்தனர். இப்படி ஒரு அதிசயமான சம்பவம் மருத்துவ வரலாற்றில் இதற்கு முன்னர் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த அவர்கள், மறுத்துப் பேசியதற்காக டேவிட் – கேட் தம்பதியரிடம் மன்னிப்புக் கேட்கவும் தவறவில்லை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரிய போதை வாலிபருடன் தொடர்பா..? த்ரிஷா..!
Next post யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர வந்த சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிய சமுர்த்தி அதிகாரிகள் அங்கு விஜயம்..!