ரி.பி.சி கலையகத்தை தாக்கி விவேகானந்தனை கொலை செய்ய முயற்சி செய்த லண்டன் ராஜன் நிதர்சனம் சேது ஆகியோர் லண்டன் பொலிசாரால் கைது

Read Time:8 Minute, 35 Second

Spt-sethu1.jpgநேற்று இரவு (08.06.06அன்றிரவு) 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வே நிதர்சனம் சேது உட்பட ஐந்து புலிக்குண்டர்கள் ரி.பி.சி வானொலி நிலையத்தை தாக்கி அங்கு வானொலி நிகழ்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவேகானநதன் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விவேகானந்தனை கொலை செய்ய முயற்சித்தது, வானொலி நிலையத்திற்கு முன்பாக இருந்த கமராவை உடைத்தது, வானொலி நிகழ்ச்சியை குழப்ப முனைந்தது ஆகிய குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து பொலிசாரினால் ராஜன், சேது மற்றும் புலிக்குண்டர் ஒருவருமாக மூவர் கைதாகியுள்ளனர்.

வானொலி நிகழ்ச்சி ஆரம்பமாகி ஒருமணித்தியாலத்தின் பின் வானொலி நிலையத்தின் கதவை தாக்கி உடைக்க முயன்ற வேளையில் உள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டது. வெளியில் ஆயுதங்களுடன் நின்ற ராஜன், சேது உட்பட்ட புலிக்குண்டர்கள் படுதூஷண வார்த்தைகளால் திட்டியபடி வெளியில் இருந்த கமராவை சேதப்படுத்தி கதவை உடைக்க முற்ப்பட்டனர். கலையகத்தில் நிகழ்ச்சியை நடாத்தி கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பொலிசாருக்குத் தகவல் கொடுத்து தமக்குரிய பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தனர். வானொலியின் கலையகத்திற்கு வந்த பொலிசார் ராஜன் நிதர்சனம் சேது உட்பட மூவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரதி வியாழன் தோறும் லண்டன் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன (ரி.பி.சி) வானொலியில் இரவு 8.00மணிக்கு அரசியல் கலந்துரையாடல் .இடம்பெறுவது வழக்கம். ஐரோப்பிய நாடுகளில் இருந்து வானொலி நேயர்கள் இக்கலந்துரையாடல் விவாதங்களில் தொலைபேசிய10டாக கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சமகால அரசியல் நிலவரங்கள் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி இடம் பெற்று வருவதுடன் விடுதலைப்புலிகளின் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறன. ஜனநாயக கருத்துப்பரிமாறல்களுக்கான ஒரு திறந்த விவாதக்களமாக இடம்பெற்றிருந்த இந்நிகழ்ச்சியில் புலிகள் பெருமளவு அம்பலப்படுத்தப்பட்டதுடன். ஐரோப்பிய நாடுகளில் புலிகள் மேற்கொள்ளுகின்ற கட்டாய பணவசூலிப்புக்கள் மற்றும் இலங்கையில் புலிகள் மேற்கொள்ளுகின்ற ஜனநாயக மீறல் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.

ஐரோப்பாவாழ் புலிமுகவர்கள், ஆதரவாளர்கள் வியாழக்கிழமைகளில் இடம்பெறும் இந்நிகழ்ச்சியினால் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியதால் கொலைமிரட்டல்கள், நிகழ்ச்சிகளில் தொலைபேசிய10டாக து}ஷணவார்த்தைகளை பகிரங்கமாக வெளிப்படுத்துதல், போன்ற நடவடிக்கைகளில புலிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர். இலங்கையில் ஊரோடு உறவாக எனும் நிகழ்ச்சியை ரி.பி.சி வானொலி ஒருமணிநேர நிகழ்ச்சியாக தென்றல் சேவையினு}டாக நடாத்தி வந்தபோது இருவருடங்களுக்கு முன் புலிகள் நோர்வே அரசிற்கூடாக அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர். அதேசமயம். நோர்வேயில் இருந்து சேது என்பவரால் இயக்கப்படும் நிதர்சனம் இணையத்தளம் ரி.பி.சி வானொலி மீதும் அதன் பணிப்பாளர் ராம்ராஜ் மீதும் தொடர்ச்சியான அவது}றுகளை மேற்கொண்டு வந்தது.

லண்டன் ஈழப்பதிஸ்வர ஆலய நிர்வாகியான ஜெயதேவன் மற்றும் விவேகானந்தன் ஆகியோரை புலிகள் வன்னியில் 60நாட்களுக்கு மேலாக சிறைவைத்திருந்தபோது ரி.பி.சி வானொலி இக்கைதை பகிரங்கப்படுத்தி அவர்களை புலிகளின் சிறையிலிருந்த வெளியில் கொண்டு வருவதற்கு முக்கிய காரணியாக செயற்பட்டது. புலிகளின் ஜனநாயக மீறல் நடவடிக்கைளை பகிரங்கமாக இவ்வானொலியில் ஜெயதேவன், விவேகானந்தன் ஆகியோர் பகிரங்கமாக ஆதாரப்படுத்தி விமர்சனம் செய்து வந்ததுடன் புலிகளினால் அபகரிக்கப்பட்ட ஈழப்பதீஸ்வரர் ஆலயத்தை வழக்குதாக்கல் செய்து போராடி மீட்டெடுத்தனர்.

புலிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தோல்வியடைந்து வர ஆத்திரங்கொண்ட புலிகள் ராஜன் என்பவர் மூலம் ஈழப்பதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ராஜன் என்பவரின் நடவடிக்கைகள் குறித்து லண்டன் வாழ் தமிழ்மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியதால் புலிகளின் ஆர்ப்பாட்டங்கள் மக்களிடையே பிசுபிசுத்துப்போனது. ஆத்திரங்கொண்ட புலிகள் தமது மலினத்தனமான அவது}றுப்பிரச்சாரங்களை தமது பினாமி இணையத்தளங்கள் மூலம் ஜெயதேவனுக்கும் ரி.பி.சி வானொலி பணிப்பாளர் மற்றும் வானொலியின் அரசியல் ஆய்வாளர்கள் மேல் மேற்கொண்டனர். பாலியல் பட மோசடிகள் மூலம் ஜெயதேவன் மீது வக்கிரமான அவது}றுகளை மேற்கொண்டு அம்பலமான புலிகள் லண்டனில் தயா இடைக்காடர் மூலம் மேற்கொண்ட உண்ணாவிரதப்போராட்டம் சர்வதேச கவனத்தையோ அல்லது லண்டனில் உள்ள மக்களிடையே எதுவித கவனத்தையும் பெறாமல் மண்கவ்வியது. புலிகளின் ஊடகங்களினால் மட்டுமே பிரபல்யப்படுத்தப்பட்ட இவ் உண்ணாவிரதப்போராட்டம் புலிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வியாகும்.

ஐரோப்பிய நாடுகளில் புலிகள் பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தி இருவாரம் கூட ஆகவில்லை. புலிகள் தமது வன்முறைகளை நிறுத்தவில்லை என்பதற்கு ரி.பி.சி வானொலி நிலையத்தின் மீதான தாக்குதல் நிரூபணம் செய்திருக்கிறது. ஈழப்பதிஸ்வர ஆலயத்தை அபகரிக்க முயன்று தோல்வியுற்ற புலிகள் ராஜன், சேது ஆகியோர் மூலம் விவேகானந்தன் மீது கொலை முயற்சியை மேற் கொள்ள முயற்சித்திருப்பது ஊடாக புலிகள் புலம்பெயர்நாடுகளில் கூட ஜனநாயக வழிக்கு வரப்போவதில்லை என்பதை மீண்டும் ஆதாரப்படுத்தப்படுத்தியிருக்கிறது.

லண்டன் முகவர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சரத்குமார் ராஜிநாமா ஏற்பு
Next post நார்வே சமரச முயற்சியில் `திடீர்’ முட்டுக்கட்டை பேச்சு வார்த்தைக்கு வர விடுதலைப்புலிகள் `திடீர்’ மறுப்பு