2012இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிப்பு..!

Read Time:2 Minute, 12 Second

2012இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டிக்கான அனுமதிச் சீட்டின் அதிக பட்ச விலை ยฃ725. 2012 ஒலிம்பிக்கில் தொடக்க விழாவை கண்டு களிப்பதற்கான அனுமதிச் சீட்டு ยฃ20.12 முதல் ยฃ2,012 வரை பல விலைகளில் கிடைக்கும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மொத்தம் 8.8 மில்லியன் டிக்கெட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 75 விழுக்காடு அனுமதிச் சீட்டுக்களின் விற்பனை 2011 மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. 125,000 டிக்கெட்டுக்கள் பாடசாலைக் குழந்தைகளுக்கு விநியோகிப்பதற்காக தனியே எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளுக்கும் குறைந்த விலையில் தொடங்கி விலை அதிகமான அனுமதிச் சீட்டுக்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இருந்ததை போன்று இருக்கைகள் அனைத்தும் காலியாக இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை அதிகப்படியானோர் பார்த்து ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இமயமலையில் பாபா குகையில் ரஜினி..!
Next post புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்காக மேலும் இரண்டு முகாம்கள் நிர்மாணிக்கப்படும்-அவுஸ்திரேலியா..!