உலகின் மிக நீளமான பூனை..!
Read Time:43 Second
உலகின் மிக நீளமான பூனை என்ற பெருமை அமெரிக்கப் பூனை ஒன்றுக்குக் கிடைத்துள்ளது. ஸ்டீவி என்ற இந்தப்பூனையின் பெயர் கின்னஸ் பதிவுப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளதாக றீனோ கெஸட் என்ற சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூக்கு முதல் வால் நரம்பு வரையான நீளம் 48.5 அங்குலமாகும். சுமார் நான்கரை அடி நீளமான பூனையாக இது காணப்படுகின்றது. முன்னர் உலக சாதனை படைத்த பூனை 48 அங்குலங்கள் மட்டுமே நீளமானது.
Average Rating