ஆஸி. பயணித்த 85 இலங்கையர் இந்தோனேசிய துறைமுகப் பொலிஸாரால் மீட்பு ..!(பட இணைப்பு)

Read Time:1 Minute, 51 Second

இலங்கையிலிருந்து படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிட கோரிக்கையாளர்களை இந்தோனேசிய துறைமுக பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர்.  இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக பனாயிட்டான் தீவில், இடைநடுவில் நின்ற போதே துறைமுக பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர். 

 இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 15 பெண்களும் 18 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பல குழந்தைகள் சுகயீனமுற்றிருந்ததாகவும், பலர் பல நாட்கள் ஒழுங்கான உணவின்றி தவித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இப்பயணத்தின் போது ஒரு பெண் மற்றும் ஆண் உட்பட இருவர் மரணமடைந்துமுள்ளனர். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் கூறப்படுகின்றது. இவர்கள் அனைவரும் இப்பயணத்திற்காக சிபா என்ற கடத்தல்காரருக்கு சுமார் 2000 அமெரிக்க டொலர்கள் வரை பணம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது இவர்கள் ஜகார்த்தாவிலுள்ள இந்தோனேசிய குடிவரவு தடுப்புமுகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜோர்தானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தமது எஜமானியை படுகொலை செய்துள்ளார்..!
Next post 11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’ ..!