கிரடிட் கார்ட் பாவனையை நிறுத்தினால் உடல் எடையை குறைக்கலாம்-ஆய்வறிக்கை..!
Read Time:1 Minute, 33 Second
உடல் எடையைக் குறிக்க விரும்புபவர்கள் முதலில் பல்பொருள் அங்காடிகளில் தாங்கள் வாங்கக் கூடிய பொருட்களுக்கு கார்டுகளை பயன்படுத்தாமல் நேரடியாக பண்ம் கொடுத்து வாங்க வேண்டும் என மனோஜ் தாமஸ், கல்பேஷ் கௌஷிக் தேசாய் மற்றும் சதீஷ்குமார் சீனிவாசன் ஆகிய மூவரும் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். இதற்காக பல்பொருள் அங்காடிகளுக்கு ஷாப்பிங் செல்லக்கூடிய ஆயிரம் பேரை ஆராய்ந்ததில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குபவர்களின் ட்ராலியில் உடல் எடையைக் கூட்டக் கூடிய நொறுக்குத்தீனி வகைகள் குறைவாகவும் கார்டுகளை பயன்படுத்துவோரிடம் இவை அதிகமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
நேரடியாக பணம் கொடுத்து வாங்குபவர்கள் பில் தொகை அதிகமாக வரும் போது யோசித்து தேவையானவற்றை மட்டும் வாங்கிச் செல்கின்றன்ர் என்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் போது இந்த வலி பலருக்கு தெரிவதில்லை என்பதும் அந்த ஆய்வுகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Average Rating