அனுஷ்காவுக்காக… விக்ரம், ஆர்யா வெயிட்டிங்..!

Read Time:2 Minute, 2 Second

ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதன்பிறகு சிறிதுகாலம் கோலிவுட்டிற்கு வராமலிருந்த அனுஷ்காவை வேட்டைக்காரன் மூலமாக அழைத்துவந்தார்கள். வேட்டைக்காரனை தொடர்ந்து சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா, தமிழில் வானம் படத்திலும், தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களோடு நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் இணைந்து நடிக்கும் “வேட்டை” படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் அனுஷ்கா. அதுமட்டுமல்லாமல் கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள “தெய்வ மகன்” படத்தில் அனுஷ்காதான் நாயகியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா வழக்கறிஞராக நடிக்கவுள்ளார். தமிழில் பல வாய்ப்புகள் அனுஷ்காவை தேடி வருகின்ற நிலையிலும், அனுஷ்கா தெலுங்குப் படங்களிலும் பிஸியாக நடித்துவருவதால் தெலுங்கு ரசிகர்களுக்கும் ஏமாற்றமில்லை. தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் அனுஷ்காவால் சமமாக கவனம் செலுத்த முடிந்தால்… கோலிவுட், டோலிவுட் என இரண்டிலும் வெகு நாட்களுக்கு ஸ்வீட்டி “அனுஷ்காவின்ஆட்சிதான் போங்க…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட நகைகளை ஒப்படைக்க வேண்டும்-மனோகணேசன்..!
Next post ரணில் விக்ரமசிங்க- எரிக் சொல்ஹெம் சந்திப்பு..!