அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் சிறைத் தண்டனை அனுபவிக்க தயாராக வேண்டும் ‐ சரத் என் சில்வா..!

Read Time:1 Minute, 54 Second

அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் சிறைத்தண்டனை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டுமென பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் வெள்ளைத் தேசிய உடைக்கு பதிலாக தற்போது கறுப்பு நிற ஆடைகளை அணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பாண் நுகரக் கூடாது என எவரும் பலவந்தப்படுத்தக் கூடாது எனவும், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவை உட்கொள்ளும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான மகஜரில் சரத் என் சில்வா கைச்சாத்திட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மகஜரில் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்‐டியூ.குணசேகர..!
Next post இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!