விக்ரம் படத்தில் அமலா..!

Read Time:1 Minute, 59 Second

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அலை. தமிழ்நாட்டில் இனி அமலா அலை அடித்தாலும் ஆச்சர்யமில்லை! மைனா படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் எல்லாம் கமிட் ஆகியிருக்கிறார் அமலா.  களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்கவிருக்கிற புதுப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பதை முன்பே எழுதியிருந்தோம். இப்போது மேலும் ஒரு முக்கியமான படத்தில் சைன் பண்ணியிருக்கிறாராம் அமல். மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் தான் இந்த பிரமோஷன். விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க அமலாவை கேட்டாராம் விஜய். இது விக்ரமின் ஒப்புதலோடுதான் நடந்திருக்கிறது. சிந்து சமவெளி பார்த்த பின் இந்த கேரக்டருக்கு இந்த பொண்ணு சூட் ஆவுமே என்றாரார் விக்ரம். உடனடியாக கேரளாவில் இருந்த அமலாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அனுஷ்காவுக்கு ஈக்குவலான ரோல் வேணும். விக்ரமுடன் காம்பினேஷன் இருக்கணும் என்றெல்லாம் ஆசைப்பட்ட அமலா, சம்பளத்தையும் கணிசமாக கேட்டதாக கேள்வி. எல்லாவற்றுக்கும் எஸ் சொல்லிதான் கமிட் பண்ணியிருக்கிறார்கள் அமலாவை.  ஹ்ம்ம்… ஒரு பட்டாம்பூச்சி கொஞ்சம் கொஞ்சமாக பறவையாகிக் கொண்டிருக்கிறது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர்க் குற்றங்களுடன் தொடர்பு: இலங்கை அகதி கனடாவில் கைது..!
Next post இலங்கையில் மீளவும் பன்றிக் காய்ச்சல் ஏற்படக் கூடிய அபாயம்..!