உலகில் வயது கூடிய மூதாட்டி மரணம்..!

Read Time:1 Minute, 15 Second

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் படி வயது கூடிய பெண்மணியான யூஜினீ பிளன்சார்ட் தனது 114 ஆவது வயதில் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  ‘செயின்ட்-பார்த்தலெமின் ‘ பிரான்ஸ், கரீபியன் தீவுகளின் உள்ள வைத்தியசாலையொன்றிலேயே இவர் உயிரிழந்துள்ளார். கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான இவர் கடந்த 30 வருடங்களாக இவ்வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் 1896 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி செயின்ட் – பார்த்தலெமில் பிறந்துள்ளார். இவ்வருடமே இவர் உலகின் வயது கூடிய பெண்மணியாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டார். இவரின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்க டெக்ஸாஸை சேர்ந்த பெண் ஒருவர், அதி கூடிய வயதானவர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காய் கின்னஸ் சாதனை..!
Next post தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!