ஒபாமா இன்று மனைவி-குழந்தைகளுடன் இந்தியா விஜயம்..!

Read Time:2 Minute, 49 Second

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு, இன்று நண்பகல் மும்பை வருகிறார்.  அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு , மும்பை நகர் வரலாறு காணாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் முன்பும், கேட் வே ஒப் இந்தியா பகுதியிலும் ஆயிரக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு கருதி குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் மீதும் தேச தந்தை காந்தியடிகள் மீதும் அதிக மதிப்பு கொண்டுள்ள ஒபாமாவின் வருகை இருநாட்டு உறவை மேலும் சிறப்பிக்கும் என பலதரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நேற்றிரவு, வாஷிங்டனில் உள்ள ஆன்ட்ரூஸ் விமானப்படைத் தளத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் மும்பை புறப்பட்டார். ஒபாமாவுடன் மனைவி மிச்சேலும், அவரது இரண்டு மகள்களும், விவசாயத்துறை அமைச்சர் பொருளாதாரத்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோரும் வருகின்றனர்.  மும்பை விமான நிலையத்திற்கு வரும் ஒபாமா, அங்கிருந்து ஹெலிகொப்டரில் கொலபா வந்திறங்குகிறார். பின்னர் அங்கிருந்து , காரில் தாஜ் ஹோட்டல் செல்கிறார்.  மும்பையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மும்பை தாஜ் ஹோட்டலில் அவர் தங்குவதால், அங்கு அமெரிக்க பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாடு நிலவுகிறது. தாஜ் ஹோட்டல் முன்பும், அதனைச் சுற்றியும், அருகேயுள்ள கேட் வே ஒப் இந்தியா பகுதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இரண்டு நாட்களுக்கு ஒபாமா தங்கியிருப்பதால் சத்ரபதி சிவாஜி மகராஜ் மார்க், ஆதம் தெரு, மகாகவி பூஷன் மார்க், ராம்சந்தானி மார்க், நவரோஜி பர்துன்ஜி ரோடு, பெஸ்ட் மார்க் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள்..!
Next post ‘நமீதா ஐ லவ் யூ’..!