முட்டை ஆபத்தானது-கனேடிய ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு..!

Read Time:1 Minute, 36 Second

உணவகங்களில் விற்கப்படும், தயாரிக்கப்படும் உணவுகளிலும் பார்க்க முட்டை உடலுக்கு அதிகம் தீங்கானது என்றும், முட்டையில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருதய நோய் சம்பந்தமான கனடாவின் மருத்துவர்கள் இந்தப் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். கனடாவில் தற்போது அதிகளவு உண்ணப்படும் கோழி மறறும் சீஸ் கலந்த சான்ட்விச் உணவில் 150 மில்லிகிராம் கொலஸ்ட்ரோல் மட்டுமே கலந்துள்ளது. ஆனால் தனியாக ஒரு முட்டையில் 215 முதல் 275 மில்லிகிராம் கொலஸ்ட்ரோல் கலந்துள்ளது. நீரிழிவு,கொலஸ்ட்ரோல் மற்றும் இருதய நோய்ப் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 200 மில்லிகிராமுக்கும் குறைவான கொழுப்பு உணவையே உட்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமானவர்கள் கூட 300 மில்லிகிராமுக்கு மேல் கொழுப்பு உட்கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்தப் புதிய கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீரில் மூழ்கினாலும் செயல்படும் அபூர்வ மொபைல்..!
Next post டில்லியில் ஒபாமாவுக்கு இன்று மகத்தான வரவேற்பு..!