இரண்டு தடவைகள் இலங்கையில் கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் கனடாவில் புகலிடம் கோரி மனுத்தாக்கல்..!

Read Time:1 Minute, 33 Second

இரண்டு தடவைகள் இலங்கையில் வைத்து கடத்தப்பட்ட முஸ்லிம் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கனடாவில் புகலிடம் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். தமக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகத் தெரிவித்து குறித்த முஸ்லிம் வர்த்தகர் தாக்கல் செய்த மனுவை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் நிராகரித்ததனை அடுத்து அதற்கு எதிராக நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார். முஹமட் ரசாக்டீன் அஸீஸ் என்ற வர்த்தகர் இவ்வாறு புகலிடம் கோரியுள்ளார். 2009ம் ஆண்டு அரிசோனாவில் நடைபெற்ற இரத்தினக்கல் மாநாட்டில் கலந்து கொண்ட குறித்த வர்த்தகர் கனடாவில் புகலிடம் கோரியிருந்தார். இரண்டு தடவைகள் கடத்தப்பட்டதாகவும் விடுதலை செய்வதற்காக 250000 டொலர்கள் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த இரத்தினக்கல் வர்த்தகர் தற்போது கனடாவில் ஓர் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார். செல்வந்தர்களை இலக்கு வைத்து இவ்வாறான கடத்தல்கள் இன்னமும் இலங்கையில் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 60 வருட தமிழ் மக்களின் போராட்டத்தின் இலக்கு மாகாணசபையல்ல‐இணைந்த மாகாணமே‐த.தே.கூ..!
Next post தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜக்ஸனின் வாரிசுகள் பங்கேற்பு..!