புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் மீட்பு-சந்திரசிறி..!

Read Time:2 Minute, 2 Second

புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் சுமார் ஆறரை கோடி ரூபா பெறுமதியான இந்த கொள்கலன்கள் வட மாகாணத்திலுள்ள விவசாய அமைப்புக்களுக்கும் கூட்டுறவுச் சங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆளுநர் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்கலன்களை கையளித்தார்;. இந்நிகழ்வு கிளிநொச்சி புள்ளியம் பொக்கனையிலுள்ள அரிசி ஆலை களஞ்சியத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழிலாண்மை அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தா மற்றும் பாராளுமன்ற குழுவின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். வட மாகாணத்திலுள்ள பெருமளவிலான களஞ்சியங்கள் யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ளன. தற்போது பெரும் போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை களஞ்சியப்படுத்தும் வகையில் இந்த கொள்கலன்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் மூலம் வட மாகாணத்தை சேர்ந்த விவசாயிகளும் மக்களும் பயனடைவர் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா..!
Next post ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்கான பிரதான மேடையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது..!