கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு

Read Time:2 Minute, 2 Second

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்படத்தினை திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னதாகவே, டிடிஎச் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொலைக்காட்சிச் சேனல்களில் காண்பிக்க செய்துவரும் ஏற்பாட்டினைத் திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை என நம்மிடம் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் இல்லங்களுக்குத் திரைப்படத்தைக் கொண்டுசெல்வது ஒட்டுமொத்தமாகத் தொழிலினை அழித்துவிடும் என்றார் அவர்

கமல்ஹாசனோ தனது முயற்சி திரைத் தொழிலுக்குப் புதிய பரிமாணம் சேர்க்கும் என வாதிடுகிறார். இதுபோல செய்தால் திருட்டு விசிடி பிரச்சனையும் குறையும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் அவரது வாதங்களை ஏற்பதாக இல்லை. கமலை ஆதரிக்கும் திரைப்படத்தயாரிப்பாளர்களுடனும் தாங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் எதுவுமில்லை என்றும்பன்னீர்செல்வம் கூறுகிறார்.

அடுத்தகட்டமாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லவிருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற பெண்ணை அம்மணமாக்கி….
Next post “எமக்கு குழிபறிக்க நினைத்தால், சம்பந்தனின் குருதி குடிப்போம்” புலி ஆதரவு ஊடகங்கள் எச்சரிக்கை!