ட்விட்டர் உலகில் போப்பும் இணைந்தார்…

Read Time:1 Minute, 57 Second

பாப்பரசர் பெனடிக்ட் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார். இணைய தளத்தில் தன்னோடு இணைந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தனது ஆசியை அவர் தெரிவித்துள்ளார். “அன்பு நண்பர்களே, ட்விட்டர் மூலம் உங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்கிறேன். உங்களின் நல்லாதரவுக்கு நன்றி. உங்களுக்கு எனது ஆசிர்வாதங்கள்.” என்று அவர் தனது முதல் ட்வீட் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு மேலும் நான்கு ட்வீட்டுகளையும் அவர் வெளியிட்டுள்ளார். @pontifex என்றமுகவரியில் பாப்பரசரோடு மற்றவர்கள் இணையலாம். எட்டு மொழிகளில் போப்பின் ட்விட்டர் செய்திகள் வெளியிடப்படும் என்று வாத்திகன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாப்பரசர் பெனடிக்ட் அவர்களை 7 லட்சம் பேர் ட்வீட்டரில் தொடர்பு கொண்டுள்ளனர். உலகில் இருக்கும் 120 கோடிக்கும் அதிகமான ரோமன் கத்தோலிகர்களின் தலைவரான பாப்பரசர், ட்வீட்டர் செய்திகளை நேரடியாக எழுதுவதைவிட, எழுதப்படும் செய்திகளை மேற்பார்வை செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதள உலகில் நுழைய பாப்பரசர் எடுத்துவரும் தற்போதைய முயற்சி பற்றி கருத்து வெளியிட்ட பிபிசியின் ரோம் செய்தியாளர் சமூக வலையதளங்களைப் பயன்படுத்தவும் தொடர்பாடல்களை வளர்க்கவும் வத்திகான் முயல்வதாகக் கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் வெளிநாட்டில் பிறந்தோரின் எண்ணிக்கை உயர்வு…
Next post அமைச்சர் கெஹலிய படுகொலை சதி: யாழ் பெண்ணுக்கு 20 வருட சிறை!!