புலிகளுக்கு மாதாந்தம் 5 மில்லியன்களை வழங்க உடன்பட்ட ராஜீவ்காந்தி.. – விக்கிலீக்ஸ் தகவல்

Read Time:1 Minute, 46 Second


இந்து- லங்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படும் மாதாந்த வரி வருமானத்துக்கான நட்டஈட்டை தருவதற்கு அப்போதைய இந்திய பிரதமா ராஜீவ் காந்தி இணங்கினார் என அமெரிக்க தூதரகம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கையில் உள்ள அமரிக்க தூதரகம் வாசிங்டனில் உள்ள ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தெரிவித்துள்ளது.

இதனை இலங்கைக்கான அப்போதைய உயர்ஸ்தானிகர் கே.என்.திக்சித் மற்றும் இந்திய பிரதமரின் பேச்சாளர் ஆகியோர் லண்டன் ஒப்சேவருக்கு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து லண்டன் ஒப்சேவரை கோடிட்டு இலங்கையின் பத்திரிகைகளும் இந்த இரகசிய உடன்படிக்கை செய்தியை பெரிதாக பிரசுரித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலின்படி ராஜீவ் காந்தி மாதம் ஒன்றுக்கு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நட்டஈடாக இந்திய ரூபாய்களில் 5 மில்லியன்களை வழங்க இணக்கம் வெளியிட்டிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன் பறக்கவிடப்பட்டிருந்த புலிக்கொடி!