ரன்வேயில் நிறுத்த முடியாமல் தொடர்ந்து ஓடி, வீதியில் விபத்துக்கு உள்ளான விமானம்!

Read Time:6 Minute, 21 Second

ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, ரன்வேயில் நிறுத்தப்பட முடியாமல் தொடர்ந்து ஓடிச் சென்று, விமான நிலையத் தடுப்புகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு, விமான நிலையத்துக்கு வெளியேயுள்ள வெட்டவெளியையும் கடந்து, அதற்கு அப்பால் உள்ள வீதியில் விபத்துக்குள்ளாகியது.

நேற்று நடைபெற்ற விபத்தில், விமானம் துண்டுகளாக உடைந்துள்ளது. விமானத்தின் ஒரு இஞ்சின், ரன்வேக்கு வெளியேயுள்ள பனிபடர்ந்த வெட்டவெளியில் கிடக்கிறது. காக்பிட் ஏரியா வேறாக உடைந்து விழுந்துள்ளது. விமானத்தின் டெயில் பகுதி, மற்றொரு துண்டாக உள்ளது. விபத்தில் கொல்லப்பட்ட நால்வரும், விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள்.

ரஷ்ய தனியார் விமான நிறுவனமான ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான இந்த விமானம், செக் குடியரசுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டு, காலியாக திரும்பி வந்துகொண்டிருந்தது. இதனால், 210 பயணிகள் பயணிக்கும் இந்த விமானத்தில், விமான சிப்பந்திகள் 8 பேர் மட்டுமே இருந்தனர். அதில் 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றைய 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில்.

விபத்து, ரஷ்யாவின் வுனுகோவோ விமான நிலையத்தில் நடந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள 3 விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. விபத்துக்குள்ளான விமானம், ரஷ்ய தயாரிப்பான Tu-204 ரகத்திலான விமானம். ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸின் பிரதான தளம், இந்த வுனுகோவோ விமான நிலையம்தான்.

விபத்து நடைபெற்ற நேரத்தில் வுனுகோவோ விமான நிலையத்தில், லேசான பனிப்பொழிவு இருந்தது. இதனால் ரன்வேயில் மெல்லிய படலமாக பனிப்படிவுகள் இருந்தன. ஆனால், ஒரு விமானத்தை நிறுத்த முடியாமல் ஸ்கிப் பண்ண வைக்கும் அளவுக்கு மெல்லிய படலமாக பனிப்படிவுகள் காரணமாக இருக்க முடியாது.

ரஷ்ய தயாரிப்பான Tu-204 ரகத்திலான விமானங்கள், 1995ம் ஆண்டு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டவை. இரண்டு இஞ்சின்களில் இயங்கும் மிட்-ரேஞ்ச் விமானங்கள் இவை. இதற்குமுன், இந்த ரக விமானங்கள் பெரிய விபத்து எதிலும் சிக்கிக் கொண்டதில்லை. இருப்பினும் சமீபகாலமான இந்த விமானங்கள் தொடர்பாக சில புகார்கள் பதிவாகி உள்ளன.

ரஷ்ய அரசு செய்தி ஏஜென்சியான RIA சில நாட்களுக்கு முன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இதே ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸின், இதே Tu-204 ரகத்திலான விமானம் ஒன்று தொடர்பான மற்றொரு சிறு விபத்து பற்றிய செய்தி உள்ளது.

The wrecked plane ended up on a highway outside Vnukovo airport, with smoke billowing from the back end and only a mangled part of the front half visible, after the crash at about 4.30 pm local time. According to one report, the plane crashed on its second attempt to land. It was snowing at the time, during the peak holiday travel period before the Russian New Year holiday.

அந்த விபத்து மிகச் சிறியது என்பதால், ஊடகங்கள் அதை அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த விபத்தின்போதும் விமானம் ரன்வேயில் நிறுத்தப்பட முடியாமல் வெளியே சென்றிருந்தது.

இதற்குமுன் நடந்த அந்த விபத்து, கடந்த 20ம் தேதி, நடைபெற்றது. மாஸ்கோவில் இருந்து சென்ற இதே ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸின், இதே Tu-204 ரகத்திலான விமானம் ஒன்று, சைபீரியாவின் நொவோசிபிர்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் ரன்வேயில் சரியான பொசிஷனில் தரையிறங்கியபோதும், ரன்வே முடிவதற்குள் விமானத்தை விமானிகளால் நிறுத்த முடியவில்லை.

நல்லவேளையான ரன்வேக்கு வெளியே பெரிய வெட்டவெளி இருந்ததில், அந்த விமானம் அதில் போய் நின்றது. அந்த விபத்துக்கு காரணம், விமானத்தின் thrust reverser சரியாக இயங்கவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. விமானங்களில் thrust reverser என்பது, விமானத்தின் இஞ்சினை எதிர்திசையில் சுற்றும் பொறிமுறை

அதாவது விமானம் பறந்து கொண்டிருக்குபோது ஒரு திசையில் சுற்றிக்கொண்டிருக்கும் இஞ்சின், அது தரையிறங்கியவுடன் எதிர்த்திரையில் சுற்றுவதால், விமானத்தின் அதிவேகத்தை குறைத்து, விமானத்தை நிற்க வைப்பதே thrust reverser. இது சரியாக இயங்காவிட்டால், வேகமாக தரையிறங்கும் விமானத்தை, வெறும் பிரேக் போட்டு நிறுத்த முடியாது.

நேற்று நடைபெற்ற விபத்துக்கான காரணம், விசாரணையின் பின்னரே தெரியவரும்.

****** See To VIDEO….. http://www.youtube.com/watch?v=bt-ijuI89NM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதா தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்க உறுதி
Next post அடல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அரசாங்கம் குற்றச்சாட்டு