By 10 June 2006

பொதுமக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.—ரிஎம்விபி தூயவன்.

Tmvp-uruthira.jpgபொதுமக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் து}யவன் விடுத்த அறிக்கை.யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அண்மைக் காலமாக பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளையும், படுகொலைகளையும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு அது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையையும் தெரிவிக்கின்றோம்.

இலங்கையில் யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள இக்காலப்பகுதியில் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் மனிதாபிமானமற்ற முறையில் சிறுவர்கள், பெண்கள் உட்பட பெறுமதிமிக்க மனித உயிர்கள் பறிக்கப்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது.

அண்மைக் காலத்தில் கடந்த 13.05.2006 அன்று யாழ் குடாநாட்டில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 13 பொதுமக்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டமை, கடந்த 29.05.2006 அன்று வெலிகந்தையில் 13 சிங்களஇனச் சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டமை, கடந்த 07.06.2006 அன்று மட்டக்களப்பு தரவையில் குண்டுத் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் அடங்கலாக 09 பொதுமக்கள் கொல்லப்பட்டமை என்று கொடியவர்களின் கொலைச் சக்கரம் சுழன்று இறுதியாக நேற்று 09.06.2006 மன்னார் வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட நான்குபேர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதில் முடிந்திருக்கின்றது. இதுவே இறுதிப் படுகொலையாக இருக்க வேண்டும். இனிமேல் இக்கொடூரம் எச்சமூகத்திற்கு எதிராகவும் தொடரக்கூடாது.

இப்படுகொலைகள் மனித நாகாPகத்திற்கு அப்பாற்பட்ட மனித உணர்வுகளை அடகு வைத்து விட்ட மனித மிருகங்களின் செயல்களாகும். இப்படுகொலைகளின் சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும், எத்தரப்பாக இருந்தாலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது. இது தொடர்பில் பொறுப்புள்ளவர்கள் யாரும் தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்கவும் முடியாது.

சர்வதேச hPதியில் தம்மீதான அதிருப்தியை விலக்கி உள்நாட்டில் நெருக்கடியைத் தோற்றுவித்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பாவியான மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களைப் படுகொலை செய்யும் தேவை யாருக்கு உள்ளது? என்பதை சிந்திக்க வேண்டும்.

இழப்புகளின் வலியையும் வேதனையையும் நாம் நன்குணர்ந்தவர்கள். எமது அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், எமது மக்கள் என பலபேரை கொடூரமாகக் கொல்லப்பட்ட வலியை நாம் இன்னும் மறக்கவில்லை. இவ்வலி வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதில் எமது தலைமைப்பீடம் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

சொந்த இன மக்களுக்காகப் போராடுவதாகக் கூறி அம்மக்களையே கொடூரமாகக் கொல்லும் சோகவரலாறு இப்படுகொலைகளுடன் நிறைவடையட்டும். தமிழ்மக்களின் நியாயமான உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் அதே சமயம் ஏனைய சகோதர இன மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வின் மூலமே நிரந்தர சமாதானத்தை அடையமுடியும் என்பதில் எமது தலைமைப்பீடம் தெளிவாகவுள்ளது. இவற்றிற்கு மனிதப் படுகொலைகள் தீர்வாகாது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

இறைமை மிக்க அரசாங்கம் என்ற வகையில் இலங்கை அரசாங்கம் அனைத்துஇன மக்களையும் பாதுகாப்பது அதன் முக்கிய கடமையாகும். சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி இப்படுகொலைகளின் சூத்திரதாரிகள் யாராகவிருந்தாலும், எத்தரப்பாக இருந்தாலும் எப்பொறுப்பில் இருந்தாலும் அது கவனத்திற் கொள்ளப்படாமல் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். இப்படுகொலைகள் தொடர்பில் அரசாங்கம் தனது கடமையை தட்டிக் கழிக்கக்கூடாது. அனைத்து இனமக்களும் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் அரசாங்கம் இது தொடர்பில் வெளிப்படையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

Tmvp-uruthira.jpgComments are closed.