இலங்கை, அமெரிக்க தூதரக வளவினுள் அத்துமீறி புகுந்த குரங்கு

Read Time:1 Minute, 24 Second


அமெரிக்க தூதரக வளவினுள் அத்துமீறிப் புகுந்த குரங்கொன்று உயர் பாதுகாப்பு பகுதியில் 24 மணித்தியாலங்களை செலவளித்த பின் அடுத்த நாள் தானாகவே அங்கிருந்து சென்றுவிட்டது. எதிர்பாராது வந்த இவ்விருந்தாளியை தூதரக ஊழியர்கள் வளவைவிட்டு வெளியேறும்படி பலமுறை சொல்லியும் அவர் விட்டுப்போக மறுத்துவிட்டார். இக்குரங்கை வெளியே அனுப்பும் முயற்சியில் அமெரிக்க கடற்படை வீரர்களும் இலங்கை பாதுகாப்பு ஊழியர்களும் மும்முரமாக பங்கேற்றனர்.

‘அது அடுத்த நாள் பக்கத்து வளவினுள் பாய்ந்து வெளியேறிவிட்டது. இலங்கை வனவிலங்கு உத்தியோகஸ்தர்களும் அதை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்’ என அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளரொருவர் கூறினார். இப்பிரச்சினையை மனிதாபிமான முறையில் தீர்க்க உதவிய இலங்கை வனவிலங்கு திணைக்களத்துக்கு நன்றி கூறுகின்றோம்’ எனவும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாலிபான்களால் தலையில் சுடப்பட்டிருந்த மலாலா வீடு திரும்பினார்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…