கனடாவிற்கு ஆட்கடத்தற்காரர்கள் மூலம் கனடா வர முயற்சி செய்ய வேண்டாம்! -கனடிய குடிவரவு அமைச்சர்

Read Time:4 Minute, 18 Second


இன்று கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஆட்கடத்தல்க் காரர்கள் மூலம் கனடா வர விரும்புபவர்களிற்கு நாங்கள் விடுக்கும் காட்டமான செய்தி யாதெனில், தயவு செய்து அப்படியான வழிகளில் கனடா வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள். உங்கள் பணத்தைக் கறக்கும் மேற்படி ஆட்கடத்தல்காரர்கள் உங்களை நட்டாற்றில் விடுகிறார்கள் என்பதையும் கவனத்திலெடுங்கள் என்று தெரிவித்தார்.

கனடா அகதிகள் விவகாரத்தில் காருண்யமாகச் செயற்படும் நாடு என்பது உண்மை. அதற்காக அந்த நடைமுறையை ஆட்கடத்தல்காரர்களினுடைய முயற்சிகளினூடாக மீற முயன்றால் நீங்கள் அவர்களிற்குக் கட்டிய காசை இழக்கின்றதைத் தவிர எதுவுமே உங்களிற்கு நடக்கப்போவதில்லை என்று காட்டமாகத் தெரிவித்தார்.

சிறீலங்கா உளவுப்பிரிவு மற்றும் படைத்துறைகளின் சேவைகளினால் மிக அண்மைக் காலங்களில் அவர்கள் பயணத்துறையை (இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டுமுன்பே) பயணங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இது போன்றே கடந்த இரண்டு வருடங்களாக இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தடுக்கப்பட்டன என்பதையும் தெரிவித்தார்.

கனடியப் பிரதமர் இந்த ஆட்கடத்தல் முயற்சிகளைத் தடுக்க 12 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதைக் குறிப்பிட்ட கனடியக் குடிவரவு அமைச்சர் கனடிய உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் ஏனைய நாடுகளிலுள்ள அந்த நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுடன் தகவற் பரிமாற்றத்தில் ஈடுபட்டிக்கின்றன என்பதையும் தெரிவித்தார்.

இதேவேளை போரின் பின்னரான இணங்களின் மீள இணைதல் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் பெறவில்லையென்பது தொடர்பான கனடாவின் அக்கறையையும் பதிவு செய்ததுடன், பொதுநலவாய நாடுகளின் குறிக்கோள்களிற்கு ஏற்ப சிறீலங்கா இனங்கள் ஒன்றிணைந்து வாழுதல் என்ற தேசியப் பிரச்சினையில் ஒரு தீர்வைக் காண வேண்டுமெனவும், போரின் போது மனிதவுரிமை விவகாரங்களில் இரு தரப்பும் புரிந்த குற்றங்கள் ஆராயப்பட வேண்டுமென்றும், கனடா பிற நாடுகள் ஏற்படும் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பான வன்முறைகளிற்கு எதிராகவே செயற்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின் போது அமைச்சர் தனது துறை சாராத, ஆனால் சிறீலங்கா-கனடா பாராளுமன்ற நட்புறவுக் கழகத்தை அண்மையில் ஆரம்பிப்பதற்கு முழுமூச்சாக செயற்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் இணைத்துக் கொண்டது இராஜதந்திர வரையறைகளிற்குள் உள்வராத ஒரு செயலாகவும், அமைச்சரின் இலங்கைப் பயணத்தின் நேர்மைத் தன்மையைக் கேள்வி கொள்ள வைப்பதாகவும் அமைந்திருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண், தன் குழந்தையை அணைத்தபடி கிணற்றில் வீழ்ந்து மரணம்!
Next post இலங்கை அகதி ஆஸியில் தற்கொலை