49 ஈரோ கொடுத்து ஐரோப்பாவிற்குள் பயணம் செய்யலாம்- எயர் பிரான்ஸின் அதிரடி அறிவிப்பு!

Read Time:1 Minute, 50 Second


பிரான்சின் எயர் பிரான்ஸ் விமான நிறுவனம் இன்று அதிரடியாக விலைக்குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஏற்கனவே குறைந்த விலையில் பயணங்களை நடத்தி வரும் விமான நிறுவனங்களிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விமான பயண சீட்டுகளை மலிவு விலையில் அறிவித்துள்ளது

பிரான்ஸின் உள்ளுர் சேவைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான சேவைகள் மத்திய கடல் பிரதேச நகரங்கள் உட்பட 58 வழித் தடங்களிற்கான விமான பயண சீட்டுகளின் ஆரம்பவிலையாக 49 ஈரோவாக நிர்ணயித்துள்ளது. உள்ளுர் சேவையில் இரு வழி பயணத்திற்கும் இக்கட்டணமே அறவிடப்பட உள்ளது.

இன்றிலிருந்து மலிவுவிலை பயண சீட்டுகளை பதிவு செய்யலாம். ஆனால் அடுத்த மாதம் 6ஆம் திகதியில்லிருந்தே பிரயாணத்தை ஆரம்பிக்க முடியும் . எயர் பிரான்ஸ் விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது குறைந்த விலையில் விமான சேவையை நடாத்தி வரும் நிறுவனங்களிற்கு பலத்த விழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தில் பிரயாண பொதிகளை கொண்டுபோவதாக இருந்தால் அதற்கு தனியான கட்டணம் செலுத்த வேண்டும். அது தவிர வழமையாக வழங்கப்படும் சிற்றூண்டி, குளிபானம், பத்திரிகை என்பன வழங்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..