35 மில்லியனாக உயர்ந்த கனடாவின் சனத்தொகை!

Read Time:1 Minute, 27 Second

canada
கனடிய சனத்தொகை 35 மில்லியனாக உயர்ந்து விட்டதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. ஜி-8 நாடுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பெருமையினைப் பெற்றுள்ளது கனடா. இதில் கனடிய குடிமக்களின் இயற்கையான பங்களிப்பு பெருமளவில் இல்லை என்பதும் புதிதாக குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினாலேயே சனத்தொகை உயர்ந்துள்ளதும் புள்ளிவிபரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சராசரியாக நாட்டின் குடிமக்கள் ஆயிரம் பேரை எடுத்துக்கொண்டால் இவர்களில் 7.5 பேர் கனடாவிற்குள் புதிதாக குடிவந்தவர்களாகவே இருக்கின்றன என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன.

தொழில்மயமான நாடுகளில் அதிகப்படியானோர் குடியேறி வரும் நாடு என்ற சாதனையையும் பெற்றுள்ளது கனடா. 2026 இல் கனடாவின் சனத்தொகை 40 மில்லியனாகவும் , 2054 இல் 50 மில்லியனாகவும் உயரக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களின் கொழும்பு சுற்றுலா (வீடியோ! VIDEO)
Next post போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பிய இரு கைதிகள் சுட்டு கொலை