விமான இறக்கையில் சுற்றியிருந்த மலைபாம்பு

Read Time:2 Minute, 25 Second

Ani.schlange018
ஆஸ்திரேலியாவின் qantas விமானத்தில் மலை பாம்பு ஒன்று 1:45 மணி நேரம் பயணித்து விமான பயணிகளை பரபரப்புக்கு உள்ளாக்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவாண்டாஸ் (quantas ) QF191 விமானம் ஒன்று கைரேன்ஸ் (cairns ) என்னும் இடத்தில் இருந்து போர்ட் மொரேஸ்பை (Port Moresby ) க்கு காலை 6:15 க்கு புறப்பட்டது. விமானம் பரந்த சிறிது நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் ரெக்கையில் எதோ அசைவதை கண்டார். உன்னிப்பாக கவனித்ததில் அது ஒரு 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு என தெரிய வந்தது. விமானத்தில் மலைப்பாம்பு பயணிக்கும் தகவல் விமான பணி பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் பரபரப்புக்கு உள்ளாகியது. விமானம் பல ஆயரம் அடி உயரம், அதுவும் 400Kம் வேகத்தில் பறக்கிறது. மேலும் வெளி வெப்பம் -12 °C யாக உள்ளது, எனவே இந்த பாம்பு இனியும் உயுருடன் இருக்க வாய்ப்பு எல்லை என விமானி தெரிவித்தார். விமானத்தில் பாம்பு பயணிக்கும் தகவல் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும் பாம்பு உயுருடன் இருப்பதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். விமானத்தில் பாம்பு எவ்வாறு ஏறியது ? விமானம் கிளம்பும் முன்பு விமானத்தின் இறக்கைகள் சரிபர்க்கபடும். அப்பொழுதும் கூட பாம்பு இருப்பதை ஏன் கவனிக்க வில்லை போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்த நிறுவனம், விமானம் அதிக வேகத்தில் பறக்கும் பொழுது பாம்பு தனது கட்டுப்பாட்டை இழந்து வெளியில் தெரிந்ததாக கூறினார். எது எப்படியோ, பாம்பு பயணிகளுடன் விமானத்தின் உட்புறம் பயணிக்கவில்லை என்பது சற்று ஆறுதல்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி கற்பழிக்கப்பட்டு உயிருடன் எரிப்பு
Next post சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மாலுமி விடுதலை