சீனாவில் கடும் மழை மற்றும், நிலச்சரிவினால் மண்ணில் புதைந்து 43 பேர் பலி

Read Time:1 Minute, 27 Second

ANI.China
சீனாவில் கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவினால் மண்ணில் புதைந்து 43 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. சீனாவின் யுனான் மாகாணத்தில் கடுமையான தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலைக்கிராம பகுதிகளில் இன்று காலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. கௌபோவ் கிராமத்தில் இந்த மிகமோசமான நிலச்சரிவுக்கு அந்த மலைக் கிராமம் அடியோடு அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மீட்பு பணியினர் மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை 43 பேரின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்கள் மண்ணுக்குள் புதைந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த மழை தொடரும் என வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது. தொடர் மழையால் அங்கு மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மாலுமி விடுதலை
Next post பலநூறு பெண்களை நாசம் செய்த செக்ஸ் குற்றவாளி