உலக கோப்பை கால்பந்து: ஈக்வடார் அபார வெற்றி 2-0 கோல்கணக்கில் போலந்தை வீழ்த்தியது

Read Time:1 Minute, 42 Second

10football.jpgeான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கால்பந்து திருவிழா ஜெர்மனியில் நேற்று கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து- ஈக்வடார் அணிகள் மோதின.

உலக கோப்பை போட்டிகளில் 6 முறை பங்கேற்றுள்ள போலந்து அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஈக்வடார் வீரர்களின் ஆட்டம் ஆக்ரோசமாக இருந்தது. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் டேனோரியோ கார்லோஸ் தனது தலையால் முட்டி அபாரமாக கோலை அடித்தார்.

இதன் மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் ஈக்வடார் 1-0 என்ற முன்னிலை பெற்றது. பதில் கோல் திருப்ப போலந்து வீரர்கள் எவ்வளவோ போராடியும் அவர்களால் முடியவில்லை. போட்டி முடிய 10 நிமிடம் மீதமிருந்த நிலையில் ஈக்வடார் மேலும் ஒரு கோலை அடித்தது.

இந்த கோலை 80-வது நிமிடத்தில் அகஸ்டின் அடித்தார். கடைசி வரை போலந்து அணியால் ஒரு கோல்கூட அடிக்க இயலவில்லை. முடிவில் ஈக்வடார் அணி 2-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழக கவர்னர் பர்னாலா பதவிக்காலம் 5 ஆண்டு நீட்டிப்பு
Next post ஆப்கானிஸ்தானில் கழுதை மீது வெடிகுண்டு