எகிப்தில் ராணுவ வீரர்கள் சென்ற ரெயில் கவிழ்ந்து: 17 பேர் பலி

Read Time:1 Minute, 26 Second

ANI.bomb_animations
எகிப்தில் உள்ள அப்பர் எகிப்தில் இருந்து தலைநகர் கெய்ரோவுக்கு ராணுவத்துக்கு சொந்தமான ரெயில் புறப்பட்டு சென்றது. செல்லும் வழியில் புதிதாக வேலைக்கு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும் அதில் ஏறி பயணம் செய்தனர். அந்த ரெயில் பத்ராசின் அருகே ஜிஷா என்ற இடத்தில் சென்ற போது தடம் புரண்டு கவிழ்ந்தது. அதில், ரெயில் பெட்டிகள் சேதம் அடைந்தன. இச்சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 103 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை எகிப்து சுகாதார துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் ரெயில்கள் மற்றும் பஸ் போக்குவரத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. கடந்த நவம்பர் மாதம் கெய்ரோலி ரெயில்வே கேட்டை கடந்த பள்ளி பஸ் மீது ரெயில் மோதியதில் 50 பேர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதம நீதியரசரை பதவி நீக்கியமைக்கு கனடா விசனம்
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..