இன்றைய ராசி பலன்கள் – 16.01.2013

Read Time:6 Minute, 4 Second

Raasipalan-003
மேஷம்
மேஷம்: எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர் கள்.உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார். இனிமையான நாள்.

ரிஷபம்
ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல் வாக்கு கூடும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். புது திட்டங்கள் நிறைவேறும் நாள்

மிதுனம்
மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சாதிக்கும் நாள்.

கடகம்
கடகம்: மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டு மென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். மாலை யிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். விருந்தினர் களின் வருகை உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாலை 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி
கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக் கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்
துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். புதியவர்கள் அறிமுக மாவார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர் கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

தனுசு
தனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தி யில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சிலர் உங்கள் உதவியை நாடுவார் கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங் களைகற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

மகரம்
மகரம்: உற்சாகமாக எதை யும் முன்னின்று செய் வீர்கள். பிள்ளைகளை புதியபாதையில் வழி நடத்துவீர்கள். தோற்ற பொலிவு கூடும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்
கும்பம்: மாலை 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக் கப்பாருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழு திலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மீனம்
மீனம்: கணவன்-மனைவிக் குள் வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடனை அடைக்க முடியாமல் புலம்பும் கனேடியர்கள்! ஆய்வில் தகவல்
Next post உற‌வை விட‌ முத்த‌த்தை அதிக‌மாக‌ நேசிக்கும் ஆண்க‌ள்!!