“கண்ணா லட்டு தின்ன ஆசையா” கதை என்னுடையது: சந்தானம் பல்டி

Read Time:3 Minute, 13 Second

imagesCASANEIG
நடிகர் சந்தானம் நடித்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. தனது இன்று போய் நாளைவா படத்தின் கதையே இப்படம் என்று டைரக்டர் பாக்யராஜ் குற்றம் சாட்டி உள்ளார். ரூ.2 கோடி நஷ்டஈடு வேண்டும் என்று பொலிசிலும் புகார் அளித்துள்ளார். நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இதனால் பாக்யராஜ்- சந்தானம் தரப்பினரிடையே இப்பிரச்சினையில் மோதல் தீவிரமாகியுள்ளது.

படம் ரிலீசுக்கு முன் சந்தானம் டி.வி. பேட்டி யொன்றில் பாக்யராஜின் இன்று போய் நாளைவா படத்தின் உரிமையை ராம நாராயணனிடம் இருந்தது. அதனால் அவருடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறேன் என்று கூறி இருந்தார். அந்த பேட்டி விவரங்களை பாக்யராஜ் கோர்ட்டில் சமர்பித்து கதை தன்னுடையது என்று உரிமை கோரியுள்ளார்.

இது குறித்து பாக்யராஜ் நிருபர்களிடம் கூறும் போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை என்னுடையது என்று படத்தை பார்த்த பலரும் சொல்கின்றனர்.

படத்தின் வசூல் விவரம் முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி வழக்கு தொடர்ந்துள்ளேன். மொத்த வசூலையும் பார்த்த பிறகு எனக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பது பற்றி கேட்பேன் என்றார். இப்படத்துக்காக இதுவரை யாரிடமும் பணம் வாங்க வில்லை என்றும் மறுத்தார். படத்தை பார்த்த நடிகர் எஸ்.வி. சேகர் கதை என்னுடையதுதான் என்று உறுதி படுத்தி இருப்பதாகவும் சொன்னார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெற்றி கரமாக ஓடுகிறது. தியேட்டர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. வசூலிலும் பட்டையை கிளப்புகிறது. இதையடுத்து நஷ்டஈடு தொகையை உயர்த்த பாக்யராஜ் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. வசூல் விவரங்கள் கோர்ட்டுக்கு வந்ததும் எவ்வளவு நஷ்டஈடு என்ற விவரத்தை தெரிவிக்க உள்ளார்.

இதற்கிடையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா கதை தன்னுடையது என்று சந்தானம் கூறியுள்ளார். மூன்று பேரை வைத்து ஒரு கதை என் சிந்தனையில் ஓடியது. அதைதான் கண்ண லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் படமாக எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். சந்தானத்தின் இந்த பல்டிக்கு பாக்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
imagesCASANEIGimagesCA835B3H

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னாரில் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு சியாத் இயக்கம் கொலைமிரட்டல்
Next post இந்தியாவின் கேரள மாநிலத்தில், சிறுவர் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்!