இன்றைய ராசிபலன்கள் :19.01.2013

Read Time:8 Minute, 36 Second

Raasipalan-003
மேஷம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

மிதுனம்
இரண்டு மூன்று நாட்களாக முடியாமல் இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலைக் காணப்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

கடகம்
இன்று மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப்பேசும் சூழல் அமையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வானபழுது நீங்கும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். முன்கோபம் விலகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

சிம்மம்
இன்று ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

கன்னி
சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

துலாம்
இன்று சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

விருச்சிகம்
நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மன உளைச்சல் நீங்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

தனுசு
இன்று மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு. குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

மகரம்
புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்கோபம் விலகும். பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

கும்பம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

மீனம்
இன்று புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு. வீடு, வாகனச் செலவுகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிறிக்கெற் வீரர் டில்சானின் காமக் கமரா!
Next post மன்னாரில் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு சியாத் இயக்கம் கொலைமிரட்டல்