இன்றைய ராசிபலன்கள்:20.01.2013

Read Time:8 Minute, 44 Second

Raasipalan-002
மேஷம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

ரிஷபம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் சச்சரவு வரும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியால் மறைமுக பிரச்னைகள் அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

மிதுனம்
பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். கையில் காசு பணம் தேவையான அளவு புரளும். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நீண்டநாளாக நினைத்திருந்த காரியத்தை இப்பொழுது செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

கடகம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கையில் காசுபணம் புரளும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டாரம் விரியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

சிம்மம்
புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

கன்னி
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

துலாம்
காலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

விருச்சிகம்
வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோபம் குறையும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

தனுசு
இன்று மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

மகரம்
ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டிக்களுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. பிரபலங்களின் உதவி கிடைக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

கும்பம்
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பிராத்தனைகளை நிறைவேற்றுங்கள். கன்னிப்பெண்களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

மீனம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிராணி சாதாரண பிரஜை தான் அவருக்கு பாதுகாப்பு அவசியமில்லை! -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Next post அல்ஜீரிய பணயக் கைதிகளில் பலர் பலி