இன்றைய ராசிபலன்கள்:21.01.2013

Read Time:8 Minute, 12 Second

Raasipalan-002
மேஷம்
காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

ரிஷபம்
காலை 9.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னைகள் வந்துச் செல்லும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்
ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

கடகம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

சிம்மம்
சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி
காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்-. உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

துலாம்
காலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

விருச்சிகம்
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

தனுசு
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

மகரம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்
பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

மீனம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post LTTE தலைவர் பிரபாகரன் வசித்த வீட்டை மக்கள் பார்வைக்கு வைத்துள்ள படையினர்! (PHOTOS)
Next post விமான நிலையத்தில் பா.உ ஸ்ரீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் கைது