விமான நிலையத்தில் பா.உ ஸ்ரீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் கைது

Read Time:4 Minute, 53 Second

ANI.monkey-yes
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜயக்கொடி தெரிவித்தார். இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து நேற்று மன்தினம் (19) செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றவேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்ட போலி கடவுச் சீட்டு தொடர்பிலேயே இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அறிவகம் எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிதரனின் அலுவலகத்திலிருந்து வெடிமருந்து, ஆபாச வீடியோக்கள் , புகைப்படங்களுடன் பிரதேச யுவதிகளின் புகைப்படங்கள் பல கைப்பற்றபட்டமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றினால் இவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகி இருந்த பொன்காந்தன் இந்தியாவிற்கு புறப்படவிருந்த விமானம் ஒன்றில் தப்பி ஓடுவதற்கு முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்தவாரம் யாழ்பாணத்தில் இரு இளைஞர்கள் சுமார் 11 கிலோ கிராம் வெடி மருந்துடன் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஒரு இளைஞன் சிறிதரனின் செயலாளரும் நெருங்கிய சகாவுமான அருணாச்சலம் வேளமாளிகிதனின் நெருங்கிய நண்பர் என்பதும் அவர் கைது செய்யப்பட முதல் கிளிநொச்சியிலுள்ள சிறிதரனின் அலுவலகத்திலிருந்தே புறப்பட்டிருந்தார் என்ற தகவலும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் கிளிநொச்சி அலுவலகத்தை பொலிஸார் சோதனையிட்ட போது அங்கிருந்து அதேரக வெடிமருந்துகளுடன் மேலதிகமாக ஆபாச வீடியோக்கள் புகைப்படங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை பொன்காந்தனின் அலுவலகப்பைகள் மற்றும் அலுமாரிகளிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்ட போதும் 12ம் திகதி சனிக்கிழமை பொன்காந்தனை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரிடம் இல்லாத நிலையில் அலுவலத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்ற பொலிஸார் தேடுதல் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். நீதிமன்று பொன்காந்தனை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. தன்னை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்த பொன்காந்தன் சுமார் 6 நாட்கள் தலைமறைவாக இருந்து இந்தியாவிற்கு தப்பி ஓட முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையை அறிந்து கொண்டும் இவருக்கான இந்திய வீசா மற்றும் விமான பயணச்சீட்டுக்களை பெறுதல் போன்றவற்றிற்கு யார் உதவி செய்தார்கள்? என்பன தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்:21.01.2013
Next post எமது பெண்கள் வெளிநாடுகளிற்கு வேலைக்காக செல்லக் கூடாது: இதற்காகவே திவிநெகும – கருணா