By 22 January 2013 0 Comments

பிரபாவை திருமணம் செய்த போது மதிவதனி மூன்று மாத கர்ப்பம்!

LTTE_PirabaFamily(n)
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பொறுப்பில் கிளிநொச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஆணுறைகள், ஆபாச வீடியோக்கள், யுவதிகளின் புகைப்படங்கள் போன்றன இரு வாரங்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட விவகாரம் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிறிதரன் அடங்கலாக அங்கம் வகிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஒழுக்கத்தை மிகுந்த கேள்விக்கு உட்படுத்தி உள்ளது என வெளிநாட்டு இராஜதந்திரிகள் அவதானித்து உள்ளனர்.

இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றமை இராணுவத்தின் சதி வேலை என்று சிறிதரன் விழுந்தாலும் மீசையில் மண் முட்டவில்லை என்பது போல தீவிர பிரசாரங்களை முடுக்கி விட்டு உள்ள போதிலும் இப்பிரசாரங்கள் இராஜதந்திரிகள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை என்றே தெரிகின்றது.

இதற்கு பிரதான காரணங்களில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இது வரை இவ்விடயம் சம்பந்தமாக எவ்வித கண்டன அறிக்கையையும் அரசுத் தரப்புக்கு எதிராக விட தவறி இருப்பதுதான்.

இவ்விடயத்தை மிக நெருக்கமாக அவதானித்துக் கொண்டு இருக்கின்ற அயல்நாடுகள், மேலைநாடுகள் போன்றன இவ்விடயத்தில் அரசுக்கோ, படையினருக்கோ எதிராக எவ்வித கண்டனமும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் பிரித்தானிய தூதரகத்தில் இருந்து அதன் தலைமையகத்துக்கு இவ்விடயம் சம்பந்தமாக அனுப்பப்பட்டு இருக்கின்ற இராஜதந்திர ஆவண அறிக்கை ஒன்று மிகவும் சுவாரஷியமானதாக உள்ளது. இலங்கையின் தமிழ் பேசும் தலைவர்களின் பெண் தொடர்புகள் என்கிற தலைப்பில் இவ்வறிக்கை உள்ளது.

இதில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீ. ஆனந்தசங்கரி, தமிழ் தேசிய கூட்டமைப்புச் செயலாளர் நாயகம் மாவை. சேனாதிராசா, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான என். சிறிகாந்தா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், மீள்குடியேற்றத் துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர்களாக ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் யோக்கியதை குறித்து ஆராயப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் சிறிய பெட்டிக் கடை ஒன்று வைத்திருந்த பெண் ஒருவருடன் இரகசிய தொடர்பை பேணி வந்திருக்கின்றார் என்றும் அப்போது நாடாளுமன்றத்தில் வட பகுதி தமிழர்களை பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்த இன்னொரு தமிழ் அரசியல் கட்சியினருக்கு இவ்விடயம் ஓரளவு தெரிந்து இருந்தது என்றும் இதில் உள்ளது. ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் ஏதேனும் ஏடாகூடமாக பேசுகின்றபோது மேற்சொன்ன அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கரியருக்கு மட்டும் புரியக் கூடியவாறு சில சங்கேத வார்த்தைகளை சொல்வார்கள் என்றும் சங்கரி அத்துடன் குழம்பிப் போய் பேச்சை அரைகுறையில் அவசரமாக முடித்துக் கொண்டு ஆசனத்துக்கு வந்து அமர்ந்து தண்ணீர் குடிப்பார் என்றும் இதில் சொல்லப்பட்டு உள்ளது.

கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை. சேனாதிராஜாவுக்கு அம்பாறையில் கல்முனையை அண்டிய இடத்தைச் சேர்ந்த பழைய சாராய வியாபாரியான அன்னம்மா என்கிற பெண் ரவுடியுடன் கள்ளத் தொடர்பு உள்ளது என்றும் இதில் கூறப்பட்டு உள்ளது.

மனோ கணேசன் சில வருடங்களுக்கு நடுத்தர வயது பெண் ஒருவருடன் வெள்ளவத்தை கடற்கரையில் மன்மத லீலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது கையும்மெய்யுமாக பொலிஸாரிடம் பிடிபட்டமை குறித்து ஏற்கனவே அனுப்பப்பட்ட ஆவணம் ஒன்றில் விவரமாக உள்ளது என்றும் இதில் உள்ளது.

இன்றைய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் வீட்டுக்கு முன்னால் குமாரி கூரே தீக்குளித்தமை குறித்தும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவற்றை எல்லாம் விட பேரதிர்ச்சி தரக் கூடிய விடயம் ஒன்றும் இதில் இடம்பெற்று உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. பிரபாகரன் திருமணம் செய்து கொண்டபோது மதிவதனி மூன்று மாத கர்ப்பிணி என்றும் திருமணமாகி ஏழு மாதத்தில் சார்ள்ஸ் அன்ரனி பிரசவிக்கப்பட்டார் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam