28 வயது காதலனுக்காக வாழ் முழுதான சொத்தையும் இழந்த 50 வயது பெண்!!!
இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 28 வயது துருக்கி காதலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த சொத்து முழுவதையும் இழந்து, தற்போது தனிமையில் தவித்துக் கொண்டிருக்கின்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த Pat Ekins என்ற 50 வயது பெண், Marmaris என்ற இடத்தில் 28 வயது முஸ்லீம் இளைஞர் Ibrahim Halin என்பவரை சந்தித்து உள்ளார். கண்டதும் அவர் மீது காதல் கொண்ட அந்த பெண், தனது காதலருக்காக Preston, Lancashire, என்ற இடங்களில் உள்ள தனது வீடுகளை தனது குடும்பத்தினர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை தனது காதலருக்கு கொடுத்துள்ளார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் அவர் சேமித்து வைத்திருந்த £70,000 பணத்தையும் காதலரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த காதலர் மாயமாகிவிட்டதால், தற்போது பணத்தையும் இழந்து, காதலரையும் இழந்து தனிமையில் தவித்துக்கொண்டிருக்கின்றார். அவருடைய முஸ்லீம் காதலன் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தற்போது தெரிய வந்துள்ளது. அவரைப் பற்றிய மேலும் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது
Average Rating