இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி சென்னையில் டெசோ கூட்டம்!

Read Time:1 Minute, 43 Second

imagesஈழத் தமிழர்களை பாதுகாப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் டெசோ அமைப்பின் அடுத்த கூட்டம் பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னை, அறிவாலயத்தில் கூடுகிறது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மானங்களை ஐ.நா.விடம் ஸ்டாலின் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தனர். முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகு ஈழத்தை முழுவதுமாக சிங்கள மயமாக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றி வருகிறது. 89 நகரங்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பாக அறிக்கை விடுத்திருந்த கருணாநிதி, இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரது கவனத்திற்கும் இப்பிரச்னையை கொண்டு சென்றிருந்தார்.

இந்த நிலையில் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி டெசோ கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பத்தின் மகிழ்ச்சியை கணவனுடன் சேர்ந்து வெளிப்படுத்திய பாடகி ஷகீரா!! (PHOTOS)
Next post ஒரே நாளில் 8710 பேரை கட்டி அணைத்து சாதனை!