தந்திமுறைமையை கைவிடத் தீர்மானமில்லை

Read Time:1 Minute, 42 Second

slk.map_of_sri_lanka
அஞ்சல் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தந்திமுறைமையை கைவிடுவதற்கான எந்தவிதமான தீர்மானத்தையூம் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். அந்த முறைமையில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவூள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அஞ்சல் திணைக்களம் மற்றும் மத்திய தந்தி திணைக்களம் ஆகிய இணைந்து செயல்பட்ட காலப்பகுதியில் இந்த சேவை ஆரம்பமானது எனினும், சிறீலங்கா டெலிகொம் என்ற பேரில்இ கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து தந்தி சேவையினை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியூள்ளார். இதற்காக நாடளாவிய ரீதியாக ஆயிரத்து பதினெட்டு தந்தி வழங்குனர்கள் சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்சமயம் அவர்களில் ஒரு தொகுதியினர் அஞ்சல் விநியோகிக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவூம் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொபைல் போன் உள்ளவர்கள் சீன நாட்டில் 110 கோடி பேர்
Next post கொக்காட்டிச்சோலை படுகொலை தினம் அனுஸ்டிப்பு