12 பெட்ரோல் குண்டுகள் மீட்பு – விஸ்வரூபத்திற்கு எதிராக சதியா?

Read Time:1 Minute, 47 Second

question-002
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு நேற்று இரவு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படம் திரையிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பொலிசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். கோவையில் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் மநாகரம் முழுவதும் சோதனை பலப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் ஆசாத் நகர் குப்பைமேடு பகுதியில் சோதனைக்கு சென்ற பொலிசாரை கண்டதும் 4 பேர் தப்பியோடினர். இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அவர்களை துரத்தி சென்று ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தியதில், ஒரு மறைவிடத்தில் 12 பெட்ரோல் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர். விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த இந்த பெட்ரோல் குண்டுகள் பதுக்கப்பட்டதா? அல்லது வருகிற 3-ம் திகதி நடைபெற உள்ள மனித நேய மக்கள் கட்சியின் மாநாட்டை சீர்குலைக்க பதுக்கப்பட்டதா? என்று விசாரணை நடைபெற்று வருகிறன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்: 30.01.2013!
Next post வரக்காபொல விபச்சார விடுதி முற்றுகை: 6பெண்கள், 2ஆண்கள் கைது