By 1 February 2013 0 Comments

இன்றைய ராசிபலன்கள்:01.02.2013

Raasipalan-002
மேஷம்
இன்று கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

ரிஷபம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்புக் கூடும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

கடகம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அரசால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

சிம்மம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

துலாம்
யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் அளவாகப் பழகுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

விருச்சிகம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

தனுசு
இன்று உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

மகரம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

மீனம்
மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்Post a Comment

Protected by WP Anti Spam