யாழில் 117 உணவகங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிப்பு
Read Time:1 Minute, 5 Second
யாழ். மாநகராட்சி மன்ற எல்லைக்குள் அமைந்துள்ள 9 பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவூகளில் அண்ணளவாக அமைந்துள்ள 250 உணவகங்களில் 117 உணவகங்களில் குறைபாடுகள் இருப்பது இனங்காணப்பட்டு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகராட்சி மன்ற பதில் உணவூப் பரிசோதகரும், பிரதம பொதுச் சுகாதார பரிசோதகருமான க.ஆ.ஜீவநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத்தின் முதல்வர், ஆணையாளர், சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் பணிப்பின் பிரகாரம் 26ஆம் இலக்க 1980ஆம் ஆண்டு உணவூச் சட்டத்திற்கும் அதன் திருத்தங்களுக்கும், இறுதியாக வெளிவந்த உணவூ ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவூம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Average Rating