சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு

Read Time:1 Minute, 36 Second

ANI.srilanka_flagசுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. திருமலையில் நாளை இடம்பெறவூள்ள தேசிய சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வழமை போன்று இம்முறையூம் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எந்தவித மாற்றங்களும் இடம்பெறாது. தேசிய கீதத்தை இரண்டு மொழிகளிலும் பாட வேண்டுமென ஒர் அமைச்சர் விடுத்த கோரிக்கையை கவனத்திற்கொள்ள முடியாது. இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளிக்கவில்லை எனவூம் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எனினும் தேசிய மொழிக் கொள்கை அமைச்சினால் 2013ஆம் ஆண்டு சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்களம் கலந்த தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவழியில் தீப்பிடித்துக் கொண்ட பிரான்சின் அதிவேகத் தொடருந்து (TGV)!
Next post இது கர்ப்பிணிகளின் கவர்ச்சி.. திரும்பிய திக்கிலெல்லாம் போஸ் போஸ்!! (PHOTOS)