ஜனாதிபதி மஹிந்தவின் இந்திய விஜயத்தை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட சட்ட மாணவர்கள் கைது!

Read Time:1 Minute, 15 Second

arrest-009இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியா விஜயத்தை கண்டித்து கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், ரயில் மறியலில் நேற்று மாலையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரசேகர் மற்றும் ரயில்வே பொறுப்பதிகாரி லாரன்ஸ் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 13 பேரை பொலிஸார் கைது செய்தனர். இந்தியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதியை கண்டித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் திருவனந்தபுரத்திலிருந்து கோவை வந்து மாலை 3.35க்கு புறப்பட வேண்டிய கோரக்பூர் செல்லும் ரப்பிசாகர் எக்ஸ்பிரஸ் நேற்று 10 நிமிடம் கழித்து 3.35 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நதீ சந்திரசேகர நடிகையின் திருமண வீட்டில் ஜனாதிபதி மஹிந்தவும், நாமலும்.. (PHOTOS)
Next post இன்றைய ராசிபலன்:06.02.2013