பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு

Read Time:4 Minute, 57 Second

jeya-Vaiko-Thiruma.jpgமத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் குதித்து உள்ளன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். விலை உயர்வை எதிர்த்து இன்று அவர் போராட்டத்தில் குதித்தார். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன.

சென்னை சென்டிரல் மெமோரியல் ஹால் அருகில் உள்ள பார்க் டவுன் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கில் அ.தி.மு.க. தொண்டர்கள், மகளிர் அணியினர் முன்கூட்டியே வந்து திரண்டனர். அவர்கள் கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தி வந்தனர்.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் திரண்டு இருந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா காலை 11 மணிக்கு அங்கு வந்தார். கூடிநின்ற தொண்டர்கள் வாழ்த்து கோஷமிட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் வந்தனர்.

அ.தி.மு.க.வினர் மாட்டு வண்டியில் மாருதி கார், இரு சக்கர வாகனங்களை ஏற்றி வந்தனர். குதிரை வண்டிகளிலும் வந்திருந்தனர். ஜெயலலிதா மேடையில் நின்று கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

மத்திய அரசே மக்களை கொல்லாதே. பெட்ரோல்- டீசல் விலைகளை உயர்த்தி, கொடுமைப்படுத்தாதே. வாக்க ளித்த மக்களை வஞ்சிக்காதே, டீசல், பெட்ரோல் விலையை குறைத்து விடு, மத்திய அரசே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது அநியாயம்.

தி.மு.க.வே துரோகம் செய்யாதே, ஏறுதே எல்லா விலையும், ஏறுதே, எரியுதே மக்கள் வயிறு எரியுதே, டீசல்-பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக நீக்கிடு. தி.மு.க.வே துரோகம் செய் யாதே. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை நியாயப்படுத்தாதே. நாட்டு மக்களை வறுத்தாதே, என்பன போன்ற கோஷங்களை ஜெயலலிதா எழுப்ப தொண்டர்கள் திருப்பிச் சொன்னார்கள்.

கொளுத்தும் வெயிலில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் வைகோ, திருமாவளவன் கைகளை ஜெயலலிதா பிடித்து உயர்த்தினார். இதை பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தார்கள். 30 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் தாவூத் மியாகான், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது, ஐ.என்.டி.ï.சி. பொதுச்செயலாளர் காளன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், பார்வர்டு பிளாக் தலைவர் சந்தானம், மறுமலர்ச்சி மக்கள் தமிழ்தேசம் பொதுச்செயலாளர் நல்ல மணி ராஜாமணி, கட்டிட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல் வம், தலித் மக்கள் முன் னணி தலைவர் குமரி அருண் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார். பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. நன்றி கூறினார். முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, பொன்னுசாமி, எம்.எல்.ஏ.க்கள் கலைராஜன், சீனிவாசன், செந்தமிழன், எஸ்.வி.சேகர், பதர் சயீத், முன்னாள் எம்.எல்.ஏ.பபபசைதை துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ்ப்பாண மக்கள் அமைச்சர் டக்ளஸிடம் தெரிப்பு
Next post 84 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் கிரீன் கார்டு ்