இன்றைய ராசிபலன்:07.02.2013

Read Time:8 Minute, 31 Second

Raasipalan-002
மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

மிதுனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

கடகம்
இன்று பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

சிம்மம்
நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். மனக்குழப்பங்கள் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

கன்னி
இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள்ஸ் சென்று வருவீர்கள். பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச்செலவுகள் நீங்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

துலாம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டாரம் விரியும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

விருச்சிகம்
இன்று கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

தனுசு
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

மகரம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

கும்பம்
முகப்பொழிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

மீனம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப்போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவுக்கு ஓசியன் லேடி கப்பலில் வந்தவர்களில் 3பேர் நாடு கடத்தல்
Next post 13 வயது சிறுவனுக்கு காவலிருக்கும் 15 அடி மலைப்பாம்பு! (photos)