மட்டக்களப்பு மாணவன் உலகசாதனை! இலங்கையை ஒரு கணம் வியக்க வைத்தது!

Read Time:1 Minute, 54 Second

Sayanthan-பட்டிருப்பு தேசியபாடசாலையில் தரம் – 12 விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் திவ்வியராஜ் சயந்தன் உலக வங்கியினால் இணையமூலம் நடாத்தப்பட்ட“Global Picture Contest “ எனும் போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை புரிந்துள்ளார். இவர் களுவாஞ்சிகுடி, சக்கடத்தார் வீதியில் வசித்து வருகிறார். “Global Picture Contest “எனும் போட்டி ஆபிரிக்கா, கிழக்குஆசியா /பசுபிக், மத்தியஆசியா /ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா /கரிபியன், மத்தியகிழக்கு / வடஆபிரிக்கா, தென்ஆசியா எனும் 6 பிராந்தியங்களாக நடாத்தப்பட்டது. இப் பிராந்தியங்களில் தெற்காசியப் பிரிவில் திவ்வியராஜ் சயந்தன் பரிசு பெற்றுள்ளார். இவர் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கணனி வள முகாமையாளர் செல்லத்துரை – திவ்வியராஜ் – ஆசிரியர் அனுசூயா அவர்களின் சிரேஸ்ட புதல்வராவார். இவர் தன்னால் போட்டிக்கு அனுப்பப்பட்ட புகைப்படத்திற்கு பின்வருமாறு விளக்கமும் அளித்துள்ளார். “இலங்கையின் களுவாஞ்சிகுடிக்கும் கல்முனைக்குச் செல்லும் பிரதான வீதியின் களுவாஞ்சிகுடியில் தெருவோர வியாபாரிகள் நிறையப்பேர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றவர்களுள்; தனது வீட்டுவறுமை காரணமாக தேங்காய் விற்கும் சிறுவனும் ஒருவன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sayanthan-
sayan-photo1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3மாணவிகள் மற்றும் 1மாணவனுடன் வல்லுறவு: அதிபர் விடுதலை!
Next post குழுமோதலை விலக்கச் சென்ற இராணுவத்தினர் மீது தாக்குதல்: யாழ்பாணத்தில் சம்பவம்!